மதுரையை பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும்; மக்கள் வாழும் பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க கூடாது: நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

By ஆர்.ஷபிமுன்னா

‘‘மதுரையை பாரம்பரிய நகரமாக அறிவிக்க வேண்டும். மக்கள் வாழும் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கூடாது. இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 4 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

மாநிலங்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் திமுக உறுப் பினர் திருச்சி சிவா பேசிய தாவது: தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் ஆகியவை அடங் கிய டெல்டா மாவட்டங்கள் தமிழகத் தின் தானியக் களஞ்சியங்களாகக் கருதப்படுகின்றன. ஆனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது, காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலையும் செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசு அந்தப் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர் 2 ஆயிரம் அடி வரை சென்று விடும். நிலம் பாழாகிவிடும். குடிநீரும் கிடைக் காது. இத்திட்டத்தை எதிர்த்து தமிழக மக்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி உள்ளனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தால் புற்றுநோய், சிறுநீரகப் பிரச்சினை, இதய பாதிப்பு உள்ளிட்ட பிரச் சினைகள் ஏற்படும். இந்தத் திட்டம் வேண்டாம் என்று கூறவில்லை. இதை மக்கள் வசிக்காத பாலை வனப் பகுதிகளில் செய்யலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டி.ஆர்.பாலு எம்.பி.

திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசும்போது, “காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும், தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மொத்த எண்ணெ யில், புதிய துரப்பண பணியால் 0.6 சதவீத எண்ணெய்தான் கிடைக்கும். இத்திட்டதால் சமூகப் பொருளதார அல்லது நிதிசார்ந்த பலன் இருக்காது” என்றார்.

நவாஸ் கனி எம்.பி.

மக்களவையில் நேற்று பூஜ்ஜிய நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. நவாஸ் கனி பேசியதாவது:

கடந்த 26-ம் தேதி எனது தொகுதியான ராமநாதபுரத்தில் உள்ள ராமேஸ்வரம் கடலில் மீன்பிடிக்க சென்ற செல்வராஜ், நம்புவேல், செல்வராசு, பாலகிருஷ் ணன் ஆகிய 4 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத் துள்ளனர். அவர்களின் மீன்பிடி படகுகளையும் இதர உபகரணங் களையும் இலங்கை கடற்படையி னர் அழித்துள்ளனர். அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண கச்சத்தீவை மீட்டு இந்தியாவுடன் இணைப்பதற்கான முயற்சியில் இந்திய அரசு முனைப்பாக ஈடுபட வேண்டும்.

இவ்வாறு நவாஸ் கனி எம்.பி. பேசினார்.

சு.வெங்கடேசன் எம்.பி.

தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் சங்கத் தலைவர் சு.வெங்க டேசன், மார்க்சிஸ்ட் சார்பில் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் மக்களவையில் நேற்று முதல் முறையாக பேசியதாவது:

மதுரை வெறும் நகரமல்ல; அது தமிழ்ப் பண்பாட்டின் தலைநகரம். திராவிட நாகரிகத்தின் தாயகம். சமீபத்தில் கீழடியிலே நிகழ்த்திய அகழாய்வில் 2,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த எண்ணற்ற பொருட்கள் கிடைத்துள்ளன. உல கில் வேறு எந்த ஒரு நகரத்தி லும் இல்லாத ஒரு சிறப்பு என்ன வென்றால், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட எழுத்துகள் 20 கி.மீ. சுற்றளவில் 12 இடங்களில் கிடைக்கின்ற ஒரே உலக நகரமாக மதுரை அமைந்துள்ளது.

எனவே மதுரையை உலக பாரம்பரிய நகரமாக - வரலாற்றுப் பாரம்பரிய நகரமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்