கடைசி மூச்சு உள்ளவரை மக்களுக்காக போராடுவேன்: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு உருக்கம்

By என்.மகேஷ் குமார்

எனது கடைசி மூச்சு உள்ளவரை மக்களுக்காகவே போராடுவேன் என தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்குதேசம் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் தனது சொந்த தொகுதியான குப்பம் பகுதியில் சந்திரபாபு நாயுடு 2 நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொணடு வருகிறார். இதில் 2-ம் நாளான நேற்று, குடுபல்லி பகுதியில் அவர் பேசியதாவது:ஆந்திராவில் தெலுங்கு தேசம் ஆட்சி நடைபெற்றபோது, யார் மீதும் காழ்ப்புணர்வுடன் நாம் செயல்படவில்லை. ஆனால், தற்போதைய ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு தெலுங்கு தேசம் கட்சியினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

தெலுங்கு தேசம் தொண்டர்கள் யாராவது பாதிக்கப்பட்டால், நான் நேரடியாக வந்து நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை மக்களுக்காகவே போராடுவேன்.

நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். இதற்காக தொண்டர்கள் பாடுபட வேண்டும். கட்சியை பலப்படுத்துவது நமது கடமை. இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்