கடும் எதிர்ப்புக்கு இடையே தமிழகத்தில் மேலும் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி

By ஆர்.ஷபிமுன்னா

தமிழகத்தில் நிலவும் கடும் எதிர்ப் புக்கு இடையே மேலும் மூன்று இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி அளிக்கப்பட் டுள்ளது.

ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்காக ஓஏஎல்பி-2 (Open Acreage Licensing Programme) பிரிவு மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம்(டிஜிஎச்) கடந்த ஜனவரியில் ஏலம்விட்டிருந்தது.

குஜராத், ஒடிஸா, ஆந்திரா, அந்தமான், ராஜஸ்தான் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில் 14 பகுதிகள் இடம் பெற்றிருந்தன. இதன் மறுமாதம் ஓஏஎல்பி-3 பிரிவில் நாடு முழுவதிலும் 18 பகுதிகளில் ஏலம் விடப்பட் டிருந்தது. இவற்றில் தமிழகத்தில் மொத்தம் மூன்று நிலப்பகுதிகள் இடம்பெற்றன. இந்த இரண்டு ஏலங்களின் தொகை முடிவு செய்யப்பட்டு இறுதிப்பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இதன், ஒஏஎல்பி-2-ல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள திருக்காரவாசல் தொடங்கி வேளாங்கண்ணி, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், கரியாப்பட் டிணம் என 474.19 சதுர கிலோ மீட்டர் பரப்பில் மிகப்பெரிய அளவிலான நிலப்பகுதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏலஅனுமதி, மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஒ.சி) நிறுவனத்திற்கு கிடைத்துள்ளது. ஓஏஎல்பி-3-ல் தமிழகத்தின் நாகப் பட்டினம், ராமநாதபுரம் மாவட்டங் களும் புதுச்சேரியில் காரைக்காலி லும் ஹைட்ரோகார்பன் எடுக்க ‘ஆயில் அண்ட் நேச்சுரல் கேஸ் லிமிடெட்’ நிறுவனம் அனுமதி பெற்றிருக்கிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தின் 459.83 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு, நல்லநாயகிபுரம், சீர்காழி அருகே உள்ள நெம்மேலி, இவாநல்லூர், சோழசேகரநல் லூர், ஆனந்ததாண்டவபுரம், பந்தலூர், டி.மணல்மேடு, தில்லை யாடி, சேஷமூலை உள்ளிட்ட இடங்களில் ஹைட்ரோகார்பனை எடுக்க இருக்கிறார்கள். இதில் புதுச்சேரியின் காரைக்கால் மற்றும் அம்மாவட்டத்தின் திருநள்ளாறு ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் 1401 சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதியில் ஆர் எஸ் மங்களம், தேவிபட்டினம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதி களில் ஹைட்ரோகார்பன் எடுக்கப் பட உள்ளது.

இவற்றுக்கு முன் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஓஏஎல்பி-1 முறை ஏலம் ஜுலை 2017-ல் விடப்பட்டது. காவிரி டெல்டா பகுதி யின் ஒரு நிலப்பகுதியில் ஒஎன்ஜிசி யும், ஆழம் குறைந்த இரண்டு கடலோரப் பகுதிகளில் வேதாந்தா நிறுவனமும் ஏலம் எடுத்தன.

இங்கு ஹைட்ரோகார்பன் எடுக்கும் பணியை துவக்க, மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் சேர்த்து 25 வகையான உரிமங் களை பெற மனு அளிக்கப்பட்டுள் ளது. தமிழகத்தில் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு நிலவுவ தால், அம்மனுக்கள் நிலுவையில் உள்ளன.

டிடிவி தினகரனின் அரசியல் எதிர்காலம்? - பத்திரிகையாளர் எஸ்.பி.லக்‌ஷ்மணன் பேட்டி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்