இறந்த பிச்சைக்காரர் பையில் ரூ. 3 லட்சம்: ஆந்திர போலீஸார் அதிர்ச்சி

By என்.மகேஷ் குமார்

ஆந்திராவில் உடல்நலம் குன்றி உயிரிழந்த பிச்சைக்காரர் ஒருவரின் பையில் ரூ. 3 லட்சத்துக்கும் அதிகமான பணம் இருந்ததை கண்டு போலீஸாரும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம், மதனபல்லி பகுதியை சேர்ந்தவர் பஷீர் சாஹிப் (70). இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், அனந்தபூர் மாவட்டம், குந்தக்கல் பகுதிக்கு பிழைப்பு தேடி வந்தார்.

 இவருக்கு யாரும் எந்த வேலையும் கொடுக்க முன்வராததால், அங்குள்ள மஸ்தான் வலி தர்காவின் முன் பிச்சை எடுத்து வாழத் தொடங்கினார். இதனிடையே பஷீர் சாஹிபுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அவர் மரணம் அடைந்தார். இது குறித்து அங்கிருந்தவர்கள் குந்தக்கல் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது பஷீரிடம் இருந்த ஒரு பையை சோதனையிட்டனர். அதில் சில்லறை மற்றும் நோட்டுகளாக ரூ. 3,22,620 இருந்தது. இதைக்கண்டு போலீஸார் மட்டுமின்றி பொதுமக்களும் திகைத்தனர். இவ்வளவு பணம் இருந்தும் பஷீர் ஏன் சரியான சிகிச்சை பெறவில்லை என அங்கிருந்த மக்கள் பேசிக்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்