நாளை முதல் அமலுக்கு வருகிறது; ஆந்திராவில் தினமும் மக்கள் தர்பார் நிகழ்ச்சி: முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

By என்.மகேஷ் குமார்

ஆந்திராவில் தினமும் மக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் மனுக்களை பெறும் 'மக்கள் தர்பார்' திட்டம் நாளை (ஜுலை 1) முதல் அமலுக்கு வரும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தற்போது குண்டூர் மாவட்டம் தாடேபல்லியில் உள்ள தமது அலுவலகத்தில் இருந்து பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவரிடம் நேரில் மனு அளிப் பதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

இதனால், நாளை முதல் தினமும் காலை 8 மணி முதல் 9 மணி வரை மனு அளிக்க வரும் மக்களை நேரில் சந்தித்து அவர்களது பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பது என முதல்வர் ஜெகன்மோகன் முடிவு செய்துள்ளார். இத்திட்டத் துக்கு ‘மக்கள் தர்பார்’ எனவும் அவர் பெயர் சூட்டியுள்ளார்.

மேலும், தன்னை நாடி வரும் மக்களுக்காக காத்திருக்கும் அறை, குடிநீர் வசதி, சிற்றுண்டி வசதி, கைக் குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்காக தனி யறை வசதி, பால் விநியோகம் உள்ளிட்டவற்றை செய்து கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜெகன்மோகன் உத்தரவிட்டு உள்ளார்.

தந்தையின் வழியில்..

இவரது தந்தை மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல் வராக இருந்தபோது, தின மும் மக்களை சந்தித்து நேரில் மனு வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். தற்போது தமது தந்தையின் வழியிலேயே இந்த வழக்கத்தை ஜெகன்மோகன் பின்பற்றவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

மேலும்