நீங்கள் கன்னித்தன்மை உடையவரா?- பிஹார் மருத்துவக் கல்லூரி ஊழியர்களுக்கான விண்ணப்பப் படிவத்தில் ஏடாகூட கேள்விகள்

By அமர்நாத் திவாரி

புதிதாக வேலைக்குச் சேரும் ஊழியர்களிடம் அவர்களின் கன்னித்தன்மை மற்றும் மனைவிகளின் எண்ணிக்கை குறித்து பாட்னாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி நிறுவனம், புதிய ஊழியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்பத்தில், 'நான் ஒரு பேச்சிலர் / துணையை இழந்தவர் / கன்னித்தன்மை உடையவர்' என்ற தெரிவுகளை அளித்து அதைப் பூர்த்தி செய்யுமாறு பணித்துள்ளது.

அந்த வகைமையில் பொருந்தாதவர்கள், 'நான் திருமணமானவர் மற்றும் ஒரே மனைவியுடன்தான் வாழ்கிறேன்' என்ற தேர்வில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இன்னும் சில தெரிவுகளும் விண்ணப்பத்தில் இருக்கின்றன. அதில் 'நான் திருமணமானவர் மற்றும் நான் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளுடன் வாழ்கிறேன்' ஆகிய தெரிவுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த விண்ணப்பத்தை நிறுவனத்தில் இணையும் மருத்துவர்களும், பணியாளர்களும் பூர்த்தி செய்ய வேண்டும்.

இதுகுறித்துத் 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) கருத்துத் தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத கல்லூரி மருத்துவர், ''விண்ணப்பத்தில் மாற்றங்கள் நடக்க வேண்டுமானால் அது அரசுத் தரப்பின் வழியாகவே நடக்க முடியும்.

’உரிமையின் மீதான தாக்குதல்’

இந்த விண்ணப்பத்தைப் பார்க்கும் சில மருத்துவர்களும் பணியாளர்களும் சங்கடத்தில் ஆழ்ந்துவிடுகின்றனர். ஒரு மனிதர் கன்னித்தன்மை உடையவரா இல்லையா என்பதை நாம் எப்படிக் கேட்க முடியும்? இது ஒருவரின் உரிமையில் தாக்குதல் நடத்துவதைப் போன்றது'' என்று வருத்தம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்