காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள காவல்துறை கட்டிடத்தை குறிவைத்து இன்று (சனிக்கிழமை) காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் காவல்துறை வீரர் ஒருவர் பலியானார்.
இந்த என்கவுன்ட்டரில் பாதுகாப்புப் படையினர் 6 பேர் காயமடைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
காவல்துறையினர் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் தங்கியுள்ள இடத்தில் சனிக்கிழமை அதிகாலை திடீரென நுழைந்த தீவிரவாதிகள் எதிர்பாராதவிதமாக தாக்குதலை மேற்கொண்டனர். தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளின் விவரங்கள் மற்றும் எண்ணிக்கை இன்னும் வெளியாகவில்லை.
அதிகாலை சுமார் 4.30 மணியளவில் தாக்குதல் ஆரம்பித்தது. இது தற்கொலைப்படைத் தாக்குதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
சிஆர்பிஎப் வீரர்கள் மூவர் மற்றும் 3 காவல்துறையினர் பலியாகி இருக்கலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீவிரவாதிகளை ஒழிக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தாக்குதல் தொடர்ந்து நடைபெறுவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பகுதி பாதுகாப்புப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago