சகோதர பாசத்தை வெளிப்படுத்த 20 ஆண்டுகளுக்கு மேல் மோடிக்கு ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்

By ஏஎன்ஐ

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி வரும் தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கமார் மோசின் ஷேக். திருமணமான பிறகு இந்தியாவில் நிரந்தரமாக குடியேறிவிட்டார். தற்போது டெல்லியில் வசித்து வரும் கமார், ஆண்டுதோறும் ரக் ஷா பந்தன் கொண்டாட்டத்தின்போது பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி வருகிறார். இதுகுறித்து கமார் கூறும்போது, ‘‘நான் கடந்த 22 ஆண்டுகளாக பிரதமர் மோடிக்கு ராக்கி கயிறு கட்டி வருகிறேன். இந்த ஆண்டும் அதேபோல் அவருக்கு ராக்கி கயிறு கட்ட ஆர்வமாக இருக்கிறேன்’’ என்றார்.

அவர் மேலும் கூறும்போது, ‘‘ஆர்எஸ்எஸ் அமைப்பில் மோடி தொண்டராக இருந்தபோது முதன் முதலாக அவருக்கு ராக்கி கயிறு கட்டினேன். கடின உழைப்பு, தொலைநோக்கு பார்வையால் அவர் பிரதமராகி உள்ளார். பிரதமராக அவர் எப்போதும் பல பணிகளுடன் இருப்பதால், இந்த ஆண்டு அவரிடம் இருந்து அழைப்பு வராது என்று நினைத்தேன். ஆனால், 2 நாட்களுக்கு முன்னர் அவரிடம் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதை நான் எதிர்பார்க்கவே இல்லை. இந்த ஆண்டும் மோடிக்கு ராக்கி கயிறு கட்டுவதற்கு ஆவலுடன் இருக்கிறேன்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்