ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தூக்கிலிட்டாலும் தவறில்லை: இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஜெகன்மோகன் ஆவேசம்

By என்.மகேஷ் குமார்

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தூக்கிலிட்டாலும் தவறில்லை என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசமாக பேசினார். இதை கண்டித்து மாநிலத்தின் பல்வேறு இடங்களில் தெலுங்கு தேசம் கட்சியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டம், நந்தியாலா சட்டமன்ற தொகுதிக்கு வரும் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தல் ஆளும் கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இடையே கவுரவ பிரச்சினையாக மாறியுள்ளது. இதனால் தெலுங்கு தேசம் கட்சியின் 9 அமைச்சர்கள் நந்தியாலாவில் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டியும் கடந்த 2 நாட்களாக கர்னூலில் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் ஜெகன் மோகன் நேற்று கொப்பாடு மண்டலம், தீபகுண்ட்லா என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “ஆந்திர மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளாக மிகவும் மோசமான ஆட்சி நடந்து வருகிறது. இதனால் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தூக்கிலிட்டாலும் தவறில்லை” என்றார்.

ஜெகன் கடந்த சில நாட்களுக்கு முன், “சந்திரபாபு நாயுடுவை நடுரோட்டில் சுட்டாலும் தவறில்லை” என்றார். இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையத்திற்கு ஜெகன் மோகன் விளக்கம் அளித்தார். இந்நிலையில் இவர் மீண்டும் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக விமர்சித்துள்ளார். இதையடுத்து ஜெகனை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நேற்று மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்