மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம்

By பிடிஐ

மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் நடைபெறுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே மாதம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மேற்கொள்ளும் முதல் அமைச்சரவை விரிவாக்கம் இதுவாகும்.

பாஜகவைச் சேர்ந்த மனோகர் பாரிக்கர், முக்தார் அப்பாஸ் நக்வி உட்பட 15 பேர் அமைச்சரவையில் சேர்க்கப்படுவார்கள் என்று தெரிகிறது. அமைச்சரவை விரிவாக்கத்துடன் அமைச்சரவை மாற்றமும் செய்யப்படுகிறது. இணை அமைச்சர்களாக உள்ள சிலருக்கு கேபினட் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளது.

பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாக தெலுங்கு தேசம், சிவசேனா ஆகியவை முறையே ஒய்.எஸ்.சவுத்ரி, அனில் தேசாய் ஆகியோரை அமைச்சரவையில் சேர்க்க பரிந்துரை செய்துள்ளன. மாநிலங்களவை உறுப்பினர் களான இருவரும் இணை அமைச் சர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அமைச்சரவையில் தற்போது 45 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் பிரதமர் உட்பட 23 பேர் கேபினட் அமைச் சர்களாகவும் 22 பேர் இணை அமைச்சர்களாகவும் உள்ளனர். இணை அமைச்சர்களில் 10 பேர் தனிப் பொறுப்பு வகிக்கின்றனர்.

மனோகர் பாரிக்கர் (59) மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்படுவதையொட்டி, நேற்று அவர் தனது கோவா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பாதுகாப்புத் துறை வழங்கப்படும் என்று தெரிகிறது. தற்போது நிதியமைச்சர் அருண் ஜேட்லி பாதுகாப்புத் துறையை கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

ஐ.ஐ.டி.யில் படித்தவரான பாரிக்கர், கோவாவில் இருந்து மத்தியில் கேபினட் பதவியேற்கும் முதல்நபர் என்ற பெருமையை பெறுகிறார். பாஜகவின் முஸ்லிம் தலைவரான முக்தார் அப்பாஸ் நக்வி (57) 15 ஆண்டுகளுக்குப் பிறகு அமைச்சராக பதவியேற்க உள்ளார். இதற்கு முன்பு வாஜ்பாய் தலைமையிலான அரசில் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச் சராக பதவி வகித்தார். உ.பி.மாநிலங்களவை எம்.பி.யான இவர், தற்போது பாஜக துணைத் தலைவராக உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்