நாட்டின் 29-வது மாநிலமாக உருவான 6 மாதத்தில் தெலங்கானாவுக்கு ரூ. 26 ஆயிரம் கோடி வருவாய் கிடைத் துள்ளது என நேற்று சட்டப்பேரவையில் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
மாநிலத்தின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரில் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் நேற்று பேசியதாவது:
தெலங்கானாவில் வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் அரசியல் உள்நோக்கத்துடன் விமர்சிக் கின்றன. கடந்த 6 மாதத்தில் மட்டும் தெலங்கானாவுக்கு ரூ.25,947 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
6 மாதங்களாகியும் மாநில பிரி வினை சட்டப்படி இதுவரை அரசு ஊழி யர்கள் இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாக பிரிக்கப்பட வில்லை. ஊழியர்களுக்கு தட்டுப்பாடு இருந்தா லும் சிறப்பாக ஆட்சி நடத்தி வரு கிறோம். இதுவரை பல்வேறு வரிகள் மூலம் மட்டுமே ரூ.30,378 கோடி வசூலாகி உள்ளது.
நடப்பு 2014-15-ம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ. 1 லட்சத்து 600 கோடியில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ரூ. 2,544 கோடி உபரியாக உள்ளது. இத னால் ரிசர்வ் வங்கியிடம் வளர்ச்சிப்பணி களுக்காக ரூ.5,000 கோடி கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் பிப்ரவரி மாதத்திலேயே 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இவ்வாறு சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago