ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தை ஒட்டிய எல்லைப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் பலியானார்.
குப்வாரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்தார்.
இந்த இரு தாக்குதல்கள் குறித்தும் இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பில், “காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் ருகியா பி (45) வயதான பெண் ஒருவர் பலியானார்.
குப்வாரா பகுதியிலுள்ள ராணுவ முகாம் மீது வெள்ளிக்கிழமை இரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்தார். தற்போது அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி பூஞ்ச் மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாகாடி பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் பவன் சிங் சுக்ரா (21) என்ற இளைஞர் கொல்லப்பட்டார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவது அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
43 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago