வெள்ள அபாயம்: இடுக்கியில் பொதுமக்களை வெளியேற்றும் பணி துவக்கம்

By செய்திப்பிரிவு

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியைக் கடந்து உயர்ந்து வரும் நிலையில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணி துவங்கியது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முல்லை பெரியாறு அணையில் 38 ஆண்டுகளுக்குப் பிறகு 142 அடி தண்ணீர் தேக்கும் பணியில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

ஆனால், அணையில் 142 அடி அளவு தண்ணீர் தேக்கினால் வெள்ளம் ஏற்படும் என்பதால். இடுக்கி மாவட்டத்தில் அணையின் கரையோரம் வசிக்கும் 120 குடும்பத்தையும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துமாறு அம்மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் உம்மன் சாண்டி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து வண்டிப்பெரியாறு பகுதியில் முகாமிட்டுள்ள மாவட்ட ஆட்சியர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.

முதல்வர் உத்தரவின்பேரில், இடுக்கி மாவட்டத்தில் பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்