நரம்பியல் வியாதியால் அவதிப்படும் மகளை கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்: ஆந்திர நீதிமன்றத்தில் பெற்றோர் மனு

By என்.மகேஷ் குமார்

நரம்பியல் வியாதியால் அவதிப்படும் 6 வயது மகளை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி நேற்று ஆந்திர மாநிலம், மதனபள்ளி நீதிமன்றத்தில் பெற்றோர் மனு தாக்கல் செய்தனர்.

சித்தூர் மாவட்டம், மதனபள்ளி அடுத்துள்ள, குரபலகோட்டா மண்டலம், தெட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்ன ரெட்டப்பா. இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு ஸ்ருதி ஹாசினி (6) எனும் மகள் உள்ளார். ஆனால் சிறு வயது முதலே ஸ்ருதி ஹாசினி நரம்பு வியாதியால் பாதிக்கப்பட்டார். இது குறித்து பல அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பயன் இல்லை. நியூரோஃபைபுரோமா (Neurofibroma) எனும் வியாதியால் சிறுமியின் நரம்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதற்கு பணம் செலவிட இயலாத காரணத்தினாலும், மகள் படும் வேதனையை பார்க்க முடியாததாலும், நேற்று சிறுமியின் பெற்றோர் மதனபள்ளியில் உள்ள கூடுதல் நீதிமன்றத்தில் கருணை கொலை செய்ய அனுமதி கோரி மனு தாக்கல் செய்தனர்.

இதுவரை ரூ.3 லட்சம் வரை செலவு செய்தோம். ஒரு முறை அறுவை சிகிச்சையும் செய்தோம். ஆனால் பலன் இல்லை. வலி தாங்க முடியாமல் என்னை கொன்று விடுங்கள் என சிறுமி அழுகிறாள். ஆதலால், கருணை கொலை செய்ய அனுமதி வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இங்கு கருணை கொலைக்கு அனுமதி கொடுக்க இயலாது எனவும் தீர்ப்பளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்