ஆந்திராவில் அப்பாவி மக்களை சுத்தியலால் அடித்து காயப்படுத்தியும் கொலை செய்தும் நகை, பணம் போன்றவற்றை கொள்ளை அடித்துச் சென்ற சுத்தி வெங்கடேஷுக்கு நெல்லூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வருலு என்கிற வெங்கடேஷ். இவர் கடந்த ஆண்டு ஜூலை 9-ம் தேதி, நெல்லூர் ஸ்ரீசாய் நகரை சேர்ந்த பள்ளி ஆசிரியை பிரபாவதியின் வீட்டுக்குள் புகுந்து அவரை சுத்தியலால் அடித்துக் கொலை செய்தார். மேலும் தடுக்க வந்த அவரது உறவினர்கள் இருவரை தலையில் அடித்து காயப்படுத்தினார். பின்னர் வீட்டில் இருந்த நகை, பணம் போன்றவற்றை சுருட்டிக்கொண்டு தப்பிச்செல்லும்போது, பிரபாவதியின் கணவர் மற்றும் அப்பகுதி மக்கள் அவரை விரட்டிப் பிடித்து பாலாஜி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பான வழக்கை நெல்லூர் 4-வது கூடுதல் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந் நிலையில் இந்த வழக்கில் வெங்கடேஷ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி வெங்கடேஸ்வர ராவ் அதிரடி தீர்ப்பு வழங்கினார். குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து அவர் தீர்ப்பளித்தார்.
வெங்கடேஷ் ஏற்கெனவே, நெல்லூர் மாவட்டம், பெத்த செருகூரு கிராமத்தில் சிவன் கோயில் அர்ச்சகர் சந்திர மவுலீஸ்வர ராவ் மற்றும் அவரது மனைவி புஷ்பவேணி ஆகியோரை சுத்தியால் அடித்துக் கொன்றுள்ளார். இந்த வழக்கில் நெல்லூர் சிறையில் அவர் ஆயுள் தண்டனை கைதியாக உள்ளார். மேலும் காவலியை சேர்ந்த ஒரு பெண்ணையும் வெங்கடேஷ் சுத்தியால் அடித்துக் கொலை செய்துள்ளார்.
சுத்தியலால் அடித்து இதுவரை 4 பேரை கொன்றுள்ள வெங்கடேஷுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago