உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது கடினம்: எம்பி அசாதுதீன் ஓவைசி கருத்து

By என்.மகேஷ் குமார்

‘முத்தலாக் குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன். ஆனால் இதனை நடைமுறைப் படுத்துவதுதான் கடினம்’ என ஹைதராபாத் எம்பியும், அகில இந்திய எம்.ஐ.எம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஓவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் திருமண முறையில் முத்தலாக் சட்ட அங்கீகாரமற்றது என நேற்று உச்ச நீதிமன்ற சிறப்பு அமர்வு தீர்ப்பு வழங்கியது. மேலும் 6 மாதத்திற்குள் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டுமெனவும் உத்தரவிட்டது. இது குறித்து நாடு முழுவதும் புதிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அகில இந்திய எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்பி யுமான அசாதுதீன் ஓவைசி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘‘உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். அதற்குரிய கவுரத்தை வழங்குகிறேன். ஆனால் இதனை நடைமுறைப்படுத்துவது கடினம்தான்’’ என கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்