விசாகப்பட்டினத்தில் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது போர் கப்பல் நடுக்கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் பலியானார். காணாமல் போன 4 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்த கடற்படை உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தின் விசாகபட்டினத்தில் இருந்து தென்கிழக்கில் 630 கி.மீ. தொலைவில் மத்திய மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே சில நாட்களுக்கு முன் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக மையம் கொண்டுள்ளது. இதனால் விசாகப்பட்டின கடல் பகுதியில் கடுமையான கடல் காற்று வீசுகிறது.
இந்த நிலையில் விசாகப்பட்டினம் கடற்படை தளம் அருகே வியாழன் இரவு 7.30 மணி அளவில் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போர் கப்பல் மூழ்கியது. தொடர்ந்து கப்பலின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் கப்பல் மூழ்கத் தொடங்கியது.
சுமார் 23 மீட்டர் நீளம் கொண்ட அந்த கப்பலில் இருந்த கப்பல் படை வீரர்கள் கடலில் தத்தளித்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்ததும் அவர்களை மீட்க மற்றொரு கப்பல் அனுப்பப்பட்டது. அதற்குள் மூழ்கிய கப்பலில் இருந்த ஒரு வீரர் பலியானார். இதனை அடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் மூழிய 23 பேர் பத்திரிமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடலுக்குள் மூழ்கிய 4 பேர் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அவர்களை தேடும் பணியில் ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
கடலுக்குள் மூழ்கியது டார்பிடோ கப்பலாகும். இந்த கப்பல் 1983–ஆம் ஆண்டு கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. விபத்து ஏற்பட்டதற்கு தொடர்பாக காரணம் குறித்து விசாரணை நடத்த இந்திய கடற்படை உத்தரவிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago