ராகுல் கார் மீது கல் வீசிய சம்பவம்: பாஜக இளைஞரணி செயலாளர் கைது

By மகேஷ் லங்கா

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்ற காரின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தில் பாஜகவைச் சேர்ந்த  ஜெயிஷ் தர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார்.

குஜராத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வெள்ளிக்கிழமை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார்.

அப்போது  பனாஸ்காந்தா மாவட்டம், லால் சவுக் பகுதியில் ராகுல் மக்களை சந்தித்துப் பேசியபோது சிலர் கறுப்பு கொடிகளை காட்டி கோஷமிட்டனர்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட ராகுலின் கார் மீது கற்கள் வீசப்பட்டன. இதில் காரின் ஜன்னல் கண்ணாடி உடைந்தது. இதில்  ராகுல் காயமின்றி தப்பினார். அவரது பாதுகாவலர்களில் ஒருவர் காயமடைந்தார்.

இந்தச் சம்பவத்துக்கு பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுமே காரணம் என்று ராகுல் காந்தி குற்றச்சாட்டினார்.

இந்த நிலையில் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் ஜெயிஷ் தர்ஜித்தை குஜராத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து குஜராத் போலீஸார் தி இந்துவிடம் (ஆங்கிலம்) கூறும்போது, "ராகுல் காந்தி கார் மீது கல் வீசிய சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜெயிஷ் தர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார்” என்றனர்.

முன்னதாக ராகுல் காந்தி குஜராத்தில் வெள்ளம் பாதித்த இடங்களுக்கு வந்ததற்கு காரணம் புகைப்படங்கள் எடுப்பதற்காகத்தான் என்று விமர்சித்த குஜராத் முதல்வர் விஜய் ருபானி தற்போது இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்