மும்பை கனமழையில் காணாமல்போன பிரபல மருத்துவர் உடல் கண்டெடுப்பு

By ஜோதி ஷில்லர்

மும்பையில் பெய்த கனமழையில் காணாமல்போன பிரபல மருத்துவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

செவாய்க்கிழமை முதல் மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்தது. சுமார் 24 மணி நேரம் இடைவிடாமல் பெய்த அடை மழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

இதனால் சாலைகள், ரயில் பாதைகள், விமான நிலையங்கள் என திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாய் காட்சி அளித்தன. இதனால் பஸ், ரயில், விமானம் உள்ளிட்ட அனைத்து வாகனப் போக்குவரத்தும் முடங்கியதால், வேலைக்குச் சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டனர்.

இந்த நிலையில் மும்பையில் பிரபல மருத்துவராக உள்ள தீபம் அமராபுர்கர் செவ்வாய்க்கிழமை மாலை முதல் காணமல் போனார்.

கடைசியாக தீபக் அவரது மனைவிக்கு செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் போன் செய்துள்ளார். அதன்பிறகு அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், மும்பையில் வொர்லி நகரில்  தீபக்கின் உடல் இன்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அவரது கையில் கட்டியிருந்த கடிகாரத்தை வைத்து கண்டெடுக்கப்பட்ட உடல் தீபக்தான் என்று அவரது உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்