நாக்பூர் - மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து

By ஏபி

நாக்பூர் - மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் மகாராஷ்டிராவுக்கு அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, நாக்பூர் - மும்பை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6.35 மணியளவில் மகாராஷ்டிராவுக்கு அருகே உள்ள அசான்கேனாம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டன.

மீட்புப் பணி வீரர்கள் விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருந்துவர்கள் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். ரயில் தடம் புரண்டுள்ளதால் இந்த வழித்தடத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என்றனர்.

இந்த விபத்து குறித்து ரயில்வே செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. சில பயணிகளுக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.

இரு பயணிகள் ரயிலில் இருந்த கழிவறையில் மாட்டி கொண்டதாகவும் அவர்களை சக பயணிகள் காப்பாற்றினர் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்பட்ட காரணம் இதுவரை தெரியவில்லை” என்றார்.

கடந்த பத்து நாட்களில் இந்தியாவில் ஏற்பட்ட மூன்றாவது ரயில் விபத்து இதுவாகும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்