தெலங்கானா மாநிலத்தில் நக்ஸ லைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ளது. குறிப்பாக ஆதிலாபாத், கரீம் நகர், கம்மம் ஆகிய மாவட்டங்களில் நக்ஸலைட்டுகளின் ஆதிக்கம் அதிகம். தெலங்கானா அரசின் செயல்பாடுகளால் நக்ஸலைட்டுகள் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான அரசில், வாரிசு களுக்கு அமைச்சர் பதவி, எம்.பி பதவி, விவசாயிகளின் தற்கொலை, மாணவர்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாதது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தெலங்கானா அரசு மீது உள்ளன.
இந்நிலையில், ரூ. 27.93 கோடி செலவில் குண்டு துளைக்காத 70 கார்கள் வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதில் 30 அமைச்சர்களுக்கு தலா ரூ. 54 லட்சத்திலும், முதல்வருக்கு ரூ. 1.39 கோடியில் ஒரு காரும் மற்றும் தலா ரூ. 77.56 லட்சத்தில் 5 கார்களும் வாங்கப்பட உள்ளன.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால், தெலங்கானா உள்துறை அமைச்சர் நாயனி நரசிம்மா ரெட்டி கூறும்போது, "பழைய கார்களுக்கு பதில் நவீன வசதிகளுடன் புதிய கார்கள் வாங்கப்பட உள்ளன. அமைச்சர்கள் மாநிலத்தில் பல இடங்களுக்கு செல்லும் வசதியாக இந்த கார்கள் உள்ளன. நக்ஸலைட்டுகளின் அச்சுறுத்தல் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்கு எப்போதும் இல்லை" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago