திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் : 600 கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு

By என்.மகேஷ் குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்திற்கு இம்முறை 600 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா செப்டம்பர் 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில், 5-ம் நாளான செப்டம்பர் 27-ம் தேதி இரவு கருட சேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், இரவு 9 மணி முதல் 11 மணி வரையிலும் வாகன சேவைகள் நடத்தப்படும். இதில் கருட சேவை மட்டும், இரவு 7.30 மணிக்கு தொடங்கி நள்ளிரவு 1 மணி வரை நடத்தப்பட உள்ளது.

பிரம்மோற்சவ விழாவுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. இம்முறை 600 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. பிரம்மோற்சவத்திற்கு பின்னரும் இந்த கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ந்து செயல்படும்.

கருட சேவைக்கு 550 அரசு பஸ்கள் மூலம் 4000 டிரிப்கள் இயக்க நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. பிரம்மோற்சவ விழாவிற்கான விளம்பர சுவரொட்டிகள் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நேற்று வெளியிடப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

மேலும்