தேர்தல் ஆணைய உத்தரவின் அடிப்படையில்:ஜெகன்மோகன் ரெட்டி மீது போலீஸார் வழக்கு பதிவு: இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வரை விமர்சித்ததால் நடவடிக்கை

By என்.மகேஷ் குமார்

நந்தியாலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி 13 நாட்கள் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் , “கடந்த தேர்தலின்போது கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தூக்கிலிட்டாலும் தவறில்லை” என பலமுறை பேசியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தனர். இதை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், “வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி மீது இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை” என மாநில தேர்தல் ஆணையத்துக்கு கேள்வி எழுப்பியது. இதையடுத்து, மாநில தேர்தல் ஆணைய உத்தரவின் பேரில் நந்தியாலம் 3-வது போலீஸ் நிலையத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மீது இபிகோ 188, 504, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கர்னூல் மாவட்டம், நந்தியாலம் சட்டப்பேரவை தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 80 சதவீத வாக்குகள் பதிவானது. பெரும்பாலும் வாக்குப் பதிவு அமைதி யாக நடைபெற்றது. வரும் 28-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்