குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று காலை தனது குடும்பத்தாருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற பின் வெங்கய்ய நாயுடு நேற்று முன் தினம் இரவு திருப்பதி வந்தார். அவரை சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா, தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் உட்பட பலர் வரவேற்றனர். பின்னர் தனது குடும்பத்தாருடன் திருமலையில் இரவு தங்கினார். இதனை தொடர்ந்து நேற்று காலை, வெங்கய்ய நாயுடு குடும்பத்தாருடன் சென்று ஏழுமலையானை தரிசித்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகள் செய்ததோடு, தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.
அதன் பின்னர் வெங்கய்ய நாயுடு திருப்பதியில் உள்ள தேவஸ்தான ‘சிம்ஸ்’ மருத்துவமனையில் ரூ.124 கோடியில் கட்டப்பட்ட ஸ்ரீ பத்மாவதி மருத்துவ கல்லூரியின் தங்கும் விடுதி, பிரசவ வார்டுகளை தொடங்கி வைத்தார். மேலும் 7 புதிய கட்டிடங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். அதன்பின்னர் வெங்கய்ய நாயுடு மருத்துவ கல்லூரி வளாக அரங்கில் உரையாற்றினார். முன்னதாக அவருக்கு மருத்துவ கல்லூரி மாணவிகள் ராக்கி கயிறு கட்டினர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago