உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உச்சிக்கு சென்றதாக பொய்யான தகவல் தெரிவித்த போலீஸ் தம்பதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புனே நகர காவல் துறையில் பணி புரியும் தினேஷ் மற்றும் அவரது மனைவி தரகேஷ்வரி ரத்தோட் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு மே 23-ம் தேதி எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்ததாக தெரிவித்தனர். இதற்கு ஆதாரமாக சில புகைப்படங்களையும் நேபாள சுற்றுலாத் துறையில் சமர்ப்பித்தனர். இதன் அடிப்படையில் இந்த தம்பதிக்கு எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதனிடையே, இந்த தம்பதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியது குறித்து சக மலையேற்ற வீரர்கள் சந்தேகம் எழுப்பினர். குறிப்பாக அவர்கள் சமர்ப்பித்த புகைப்படம் மார்பிங் செய்யப்பட்டைவை என தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய நேபாள சுற்றுலாத் துறை, எவரெஸ்ட் சிகரத்தில் ஏற இருவருக்கும் 10 ஆண்டு தடை விதித்தது. இந்நிலையில், இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு புனே காவல் துறை உத்தரவிட்டிருந்தது. விசாரணை முடிவடைந்த நிலையில், இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து புனே நகர காவல் கூடுதல் ஆணையர் சாஹிப்ராவ் பாட்டீல் கூறும்போது, “தினேஷ் தம்பதி எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதாக தவறான தகவல் கொடுத்தது விசாரணையில் நிரூபணமாகி உள்ளது. இதன் மூலம் இந்திய மற்றும் நேபாள அரசுகளை ஏமாற்றி உள்ளனர். இதையடுத்து, இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
சமீப காலமாக ஏவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், சான்றிதழ் வழங்குவதற்கான நடைமுறைகளை மறு ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகி உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago