உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் 30 குழந்தைகள் பலியான சம்பவத்தையடுத்து அந்த மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்ள இரண்டு அமைச்சர்களைப் பணித்தார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
உத்தரப் பிரதேச சுகாதார அமைச்சர் சித்தார்த்நாத், மருத்துவக் கல்வி அமைச்சர் அசுதோஷ் டண்டன் ஆகியோர் கோரக்பூர் விரைந்துள்ளனர்.
மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
குலாம் நபி ஆசாத் ஆய்வு:
இதற்கிடையில் சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பி.என்.சிங்கும் சென்றுள்ளனர்.
ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தின் காரணமாகவே 30 குழந்தைகள் பலியானதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அரசியலாக்காதீர்..
கோரக்பூர் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் உள்பட 30 குழந்தைகள் பலியான சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என மாநில சுகாதார அமைச்சர் சித்தார்த்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். எதிர்க்கட்சியினர் உண்மை என்னவென்று வெளியாவதற்கு முன்னதாகவே அவசர கதியில் ஆளும் கட்சி மீது குற்றம் சுமத்தி அறிக்கைகளை வெளியிடுவதாக துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
30 குழந்தைகள் இறந்த சம்பவத்தால் மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் தொடர்ந்து வந்துசெல்வதால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago