முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை குறைக்க வேண்டும்: தமிழக முதல்வருக்கு கேரளம் கடிதம்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 140 அடியை எட்டியது. உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த 142 அடியை விரைவில் எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி இடுக்கி, தேனி மாவட்டங்களின் கரையோர மக்களுக்கு நேற்று வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வருக்கு கேரள முதல்வர் உம்மன் சாண்டி நேற்று எழுதிய கடிதத்தில், “உபரி நீரை வைகை அணைக்கு திருப்பி விடுவதன் மூலம் முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை குறைக்க முடியும். முந்தைய ஆண்டுகளில் இதுபோல் செய்யப்பட்டுள்ளது.

அணையின் பாதுகாப்பு குறித்து இரு மாநிலங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருப்பது உண்மை. என்றாலும் இப்போதுள்ள சூழ்நிலையில் அணையின் கீழ்ப்பகுதி மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நீங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகிறது” என்று குறிப்பிட் டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

மேலும்