டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம், மக்களவைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகி நிற்கிறது.
தேமுதிக டெல்லி சட்டசபையில் போட்டியிட்டு, தமிழகத்தைச் சேர்ந்த முதல் கட்சி என்ற பெயரை எடுத்தது. கடந்த டிசம்பரில் நடந்த அந்த தேர்தலில் கடைசி நேரத்தில் 11 வேட்பாளர்களை களம் இறக்கினார் கட்சித் தலைவர் விஜயகாந்த். இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்தும் டெல்லியில் பிரச்சாரம் செய்ய விஜயகாந்த் வரவில்லை.
இது குறித்து ‘தி இந்து’விடம் கட்சியின் டெல்லி மாநிலச் செயலாளரான தட்சிணாமூர்த்தி கூறியதாவது: ‘தமிழகத்தில் பிரச்சாரம் செய்யவே எங்கள் கட்சி தலைவர் விஜயகாந்திற்கு நேரம் போதவில்லை. மேலும், டெல்லியில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளது. அதன் கூட்டணிக் கட்சியாக இருப்பதால் நாங்கள் போட்டியிட முடியாது. எனினும், அடுத்து வரவிருக்கும் டெல்லி மாநகராட்சித் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம்.
டெல்லியில் விஜயகாந்தின் பிரச்சாரக் கூட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் கூடினர். வேறுபல காரணங்களால் சட்டசபைத் தேர்தலில் கட்சி தோல்வி அடைந்தது' என்றார் தட்சிணா மூர்த்தி. டெல்லியில் வாழும் தமிழர்களில் வாக்குரிமை பெற்றவர்கள் சுமார் இரண்டு லட்சம் பேர் எனக் கூறப்படுகிறது. இவர்கள், பல பகுதிகளில் பரவியபடி வசிக்கின்றனர். எனவே, தேமுதிக எதை நம்பி டெல்லியில் போட்டியிடுகிறது என அங்கு வாழும் தமிழர்கள் மலைத்து நின்றனர்.
தமிழகத்தில் அப்போது நடந்த ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலையும் தவிர்த்து விட்டு டெல்லியில் தேமுதிகவை களம் இறக்கினார் விஜயகாந்த். அதில், போட்டியிட்ட 11 தொகுதிகளிலும் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
டெல்லியில் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு உறுதியாக உள்ளது. அதன் கூட்டணிக் கட்சியாக இருப்பதால் நாங்கள் போட்டியிட முடியாது.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago