மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் ஹெலிகாப்டர் தரையிறங்க முடியாததால் அவரது மேகாலயா பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதுகுறித்து மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்ட ஆட்சியர் சஞ்சய் கோயல் கூறியதாவது: தலைநகர் ஷில்லாங்கில் கட்டப்பட்டுள்ள பாஸ்போர்ட் சேவை மையத்தை மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைப்பதாக இருந்தது. இதற்காக அவர் ஷில்லாங் நகருக்கு இந்திய விமானப் படைக்கு சொந்தமான எம்ஐ-17 ரக ஹெலிகாப்டரில் வந்தார். அவருடன் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஜெனரல் (ஓய்வு) வி.கே.சிங்கும் இருந்தார். ஆனால் மோசமான வானிலை காரணமாக இவர்கள் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்க முடியவில்லை.
இதையடுத்து குவாஹாட்டியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையத்தில் அந்த ஹெலிகாப்டர் பத்திரமாக தரையிறங்கியது. இதையடுத்து சுஷ்மா ஸ்வராஜின் ஷில்லாங் பயணம் ரத்து செய்யப்பட்டது என தெரிவித்தார்.
பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் அனைத்து மாவட்டங்களிலும் பாஸ்போர்ட் சேவை மையங்கள் படிப்படியாக நிறுவப்படும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
40 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago