உத்தரப் பிரதேச சட்டமன்றத்தில் இருந்து 3 எதிர்க்கட்சி எம்எல்சிக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இவர்களில் இருவர் பாஜகவைப் புகழ்ந்து பேசியுள்ளனர்.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, 3 நாள் பயணமாக லக்னோ வந்துள்ள நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பதவி விலகிய எம்எல்சிக்களில் புக்கல் நவாப், யஸ்வந்த் சிங் ஆகிய இருவரும் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர்கள். தாக்கூர் ஜெய்வீர் சிங் பகுஜன் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர்.
அத்துடன் சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த மற்றொரு எம்எல்சி மதுகர் ஜெட்லியும் பதவி விலகுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ராஜினாமாக்கள் உயர் பதவியில் இருக்கும் அமைச்சர்களுக்கான வழிவிடல்கள் என்று கூறப்படுகிறது. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் மற்றும் சில பாஜக அமைச்சர்கள் ஆகியோர் தற்போது வரை சட்டப்பேரவையிலோ, சட்ட மேலவையிலோ உறுப்பினராக இல்லை. அவர்கள் அமைச்சராக இருக்கும் பட்சத்தில் 6 மாதத்துக்குள் அவர்கள் உறுப்பினராக வேண்டியது அவசியமாகும்.
இதன்மூலம் அவர்களுக்கு வழிவிட எதிர்க்கட்சிகளின் அதிருப்தி உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர் என்பது தெளிவாகிறது.
ராஜினாமா செய்த எம்எல்சி யஸ்வந்த் சிங் தனது பதவியை ஆதித்யநாத்துக்காக விட்டுச் செல்வதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், ''இந்த உறுப்பினர் பதவியை முதல்வர் யோகிஜிக்காக அர்ப்பணிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.
'அரசியல் சதி'
இதுகுறித்து விமர்சித்துள்ள அகிலேஷ் யாதவ், ''அரசியல் சதியாலோசனை மூலம் பாஜக எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு வலை விரிக்கிறது. நேரடித் தேர்தல் மூலம் சண்டையிட அச்சப்படும் பாஜக தலைவர்கள், சட்டமன்றத்தின் மூலம் பாதுகாப்பான வழியைத் தேடுகின்றனர்'' என்று விமர்சித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago