தமிழகத்தின் அம்மா உணவகத்தை போல ஆந்திராவில் ‘அண்ணா’ கேன்டீன் தொடக்கம்

By என்.மகேஷ் குமார்

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், நந்தியாலாவில் நேற்று ‘அண்ணா’ கேன்டீனை அமைச்சர் நாராயணா தொடங்கி வைத்தார். இதில் ரூ.5-க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் ‘அம்மா’ உணவகத்தைப் போன்று, ஆந்திராவிலும் மலிவு விலையில் உணவகம் தொடங்க இருப்பதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். அதன்படி தற்போது மாநில தலைநகர் அமராவதி மற்றும் அனந்தபூர் ஆகிய இடங்களில் சோதனை முயற்சியாக ‘அண்ணா’ கேன்டீன்கள் இயங்கி வருகிறது. இதனிடயே, விரைவில் இடைத்தேர்தலை சந்திக்க உள்ள கர்னூல் மாவட்டம் நந்தியாலா பகுதியில் நேற்று ‘அண்ணா’ கேன்டீனை மாநில நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நாராயணா தொடங்கி வைத்தார். இதில் ரூ. 5- க்கு சாப்பாடு வழங்கப்படுகிறது. மேலும் காலையில் இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற சிற்றுண்டிகளும் மலிவு விலைக்கு வழங்கப்படுகிறது.

இதனை தொடங்கி வைத்த அமைச்சர் நாராயணா கூறுகையில், ‘‘விரைவில் ஆந்திரா முழுவதும் 200 ‘அண்ணா’ கேன்டீன்கள் தொடங்கப்படும். அதன் பின்னர் மேலும் 100 கேன்டீன்களை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.

ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி.ராமராவை ஆந்திர மக்கள் அன்போடு ‘அண்ணாகாரு’ என்று அழைப்பது வழக்கம். அவரது நினைவாக மலிவு விலை உணவகத்துக்கு ‘அண்ணா’ கேன்டீன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்