பிஹார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சித் தொண்டரான மின்ஹாஜ் கான் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிஹார் மாநிலம் சிவான் மாவட்டம் ஷேக்புரா கிராமத்தைச் சேர்ந்த கான், அக்கட்சியின் முன்னாள் எம்.பி. முகமது ஷஹாபுதீனுக்கு மிகவும் நெருக்கமானவர் என கூறப்படுகிறது. பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய ஷஹாபுதீன் இப்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மின்ஹாஜ் கான் கொலை தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உள்ளூர் தாதா ராஜா கான் மற்றும் அவனது கூட்டாளிகளுக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago