குஜராத் கனமழையால் 8,000 பேர் இடம் பெயர்வு

By மகேஷ் லங்கா

குஜராத்தில் பெய்து வரும் கனமழையால், வடக்கு குஜராத்தில் இருந்து சுமார் 8,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

கன மழையால் பனாஸ்கந்தா மற்றும் பதான் மாவட்டங்களின் உயரம் குறைவான பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசித்த 8,000-க்கும் மேற்பட்ட மக்களை மாவட்ட நிர்வாகம் இடம் பெயரச் செய்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய சுமார் 250 மக்களை என்டிஆர்எப், பிஎஸ்எப், விமானப் படைகள் மீட்டு வருகின்றன. இந்நிலையில், குஜராத்தின் வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் அதிகப்படியான கன மழைக்கு வாய்ப்புள்ளதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜூலை 20-ம் தேதியில் இருந்து மழை வெள்ளத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் ஜூன் 1-ல் இருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. அத்துடன் 900-க்கும் மேற்பட்ட விலங்குகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்