மகாராஷ்டிராவில் 2012-2013 கல்வியாண்டில் அரசு நிதியுதவி பெறாத தனியார் மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரி கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நுழைவுத் தேர்வில் மாணவர் அஜய் ஷா உள்ளிட்ட 26 பேர் பங்கேற்றனர். ஆனால், அவர்களில் யாரும் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக அவர்களின் புகாரின் பேரில், மகாராஷ்டிரா மாநில அரசு அமைத்த விசாரணைக் குழு, “இந்த தனியார் மருத்துவக் கல்லூரி கூட்டமைப்பு நடத்திய சேர்க்கை அனுமதி நடைமுறை தவறானது” என்று அறிக்கையில் தெரிவித்தது. இதையடுத்து மும்பை உயர் நீதி மன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அங்கு அவர்களின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்ப தாவது: மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதி மறுக்கப்பட்ட தகுதி வாய்ந்த 26 மாணவர்களுக்கும் தலா ரூ. 20 லட்சத்தை நஷ்ட ஈடாக மகாராஷ்டிரா மாநில அரசு அளிக்க வேண்டும். இந்தத் தொகையை, சரி வர கடமையை செய்யாத அரசு அதிகாரிகளிடமிருந்து பெற்றுத் தர வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago