குஜராத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 82 பேர் இறந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து 36,000 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அப்புறப்படுத்தியுள்ளனர். ராணுவம், விமானப் படை மற்றும் பேரிடர் மீட்புப் படை உதவியுடன் 2500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அகமதாபாத்தில் கடுமையான மழை காரணமாக அகமதாபாத் விமானநிலையத்தின் ஓடுதளம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஏர் இந்தியா விமானங்கள் புதன்கிழமை அன்று பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
கனமழை, வெள்ளத்தால் மும்பை டெல்லி இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தடத்தில் பலன்பூர் என்ற இடத்தில் தண்டவாளம் நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வட குஜராத்தை மாநிலத்தின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் ஹிம்மத் நகர், பலன்பூர், மெகசானா அகமதாபாத், பதான் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் 913 பேருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக குஜராத்தின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago