ஆந்திர முன்னாள் அமைச்சர் மகன் மீது துப்பாக்கிச் சூடு: ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை

By என்.மகேஷ் குமார்

 

ஆந்திர முன்னாள் அமைச்சர் முகேஷ் கவுட் மகன் விக்ரம் கவுட் மீது இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தது.

அதிகாலையில் வீட்டில் இருந்து வெளியே வந்தவர் மீது 3 முறை துப்பாக்கிச் சூடு நடந்தது. இதைத் தொடர்ந்து விக்ரம் கவுட் தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சருமான முகேஷ் கவுட் ஹைதராபாத்தில் ஃபிலிம் நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்த வீட்டிலேயே இவரது மகன் விக்ரம் கவுடும் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கோயிலுக்குச் செல்ல அவர்கள் முடிவு செய்திருந்தனர்.

அப்போது வீட்டிற்கு வெளியே விக்ரம் கவுட் சுமார் 3.30 மணியளவில் வந்தபோது, இவர் மீது 3 முறை துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படுகிறது. விக்ரம் கவுடின் தோள்கள் மீதும், வயிற்றுப்பகுதியிலும் குண்டுகள் பாய்ந்தன. இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடிவந்து பார்த்த அவரது மனைவி அதிர்ச்சி அடைந்து, போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸார் வந்து விக்ரமை ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து 3 குண்டுகளும் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஜூப்ளி ஹில்ஸ் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

இந்தியா

28 mins ago

இந்தியா

32 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்