புர்ஹான் வானியின் இல்லத்துக்கு போரட்டக்காரர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டத்தைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே மோதல் ஏற்பட்டது.
ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் படை தளபதி புர்ஹான் வானி கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து காஷ்மீரில் இன்று (சனிக்கிழமை) பிரிவினைவாதிகள் புனித பேரணிக்கு எற்பாடு செய்திருந்தனர்.
இதனை அடுத்து புர்ஹான் வானியின் சொந்த ஊரான ட்ரால், சோபியன் மற்றும் தெர்கஹம் ஆகிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புர்ஹான் வானியின் இல்லத்துக்கு செல்ல முயன்ற போராட்டக்காரர்களை பாதுகாப்புப் படையினர் தடுத்தததால் இருதரப்புக்கும் இடையே மோதல் உண்டானது.
போராட்டக்காரர்கள் பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி ஏறிந்ததலால் அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி பாதுகாப்பு படையினர் கலைத்தனர்.
இந்தக் கலவரம் குறித்து புர்ஹான் வானியின் தந்தை முசாஃபர் வானி கூறும்போது, "எங்களது இல்லத்துக்கு வெளியே ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். நான் வெளியே செல்ல முடியவில்லை. என் மகனின் கல்லறைக்கு செல்ல சாத்தியமில்லாமல் போய்விட்டது" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago