போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்திடம் அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
தெலங்கானா மாநிலம் ஹைத ராபாத்தில் போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் தெலுங்கு திரைப்பட நடிகைகள், நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் என மொத்தம் 12 பேர் நேரில் ஆஜராகும்படி விசாரணைக் குழு நோட்டீஸ் அனுப்பியது.
இவர்களில் பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் நேற்று ஹைத ராபாத் நாம்பல்லியில் உள்ள அக்பரி கலால்துறை விசாரணை குழு முன்பு நேரில் ஆஜரானார். இவருடன் இவரது தம்பி மற்றும் வழக்கறிஞர்களும் வந்தனர். பூரி ஜெகன்நாத்திடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடைபெற் றது.
குறிப்பாக போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் முக்கியக் குற்றவாளியான கெல்வின் என் பவருடன் பூரி ஜெகன்நாத்திற்கு உள்ள தொடர்பு குறித்து கேட்கப்பட்டது. இதற்கு, அவர் ‘சினிமா தொடர்புடைய விழாக்களை ஏற்பாடு செய்பவர் என்பதன் மூலமாக நட்பு ஏற்பட்டது. ஆனால் அவர் போதைப்பொருள் உபயோகிப்பவர் என்றும், விற்பனை செய்பவர் என்றும் அவருடன் பழகிய பின்னர் தெரியவந்தது’ என இயக்குநர் பதிலளித்ததாகக் கூறப்படு கிறது.
மேலும் பூரி ஜெகன்நாத், கெல்வின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பியது பற்றியும், சமூக வலைதளத்தில் இருவரும் உரையாடியது குறித்தும் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
இதற்கு தனக்கு போதைப் பொருள் உபயோகிக்கும் பழக்கம் இல்லை என பூரி ஜெகன்நாத் பதிலளித்துள்ளார்.
நடிகை சார்மியை முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த ‘ஜோதிலட்சுமி’ எனும் தெலுங்கு திரைப்பட விழாவில் கெல்வினும் கலந்து கொண்டுள்ளார். இதற்கான புகைப்படங்களை காண்பித்து, அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பூரி ஜெகன்நாத் சரியாக பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
மேலும் இவரது தினசரி பழக்க வழக்கங்கள், சினிமா துறை நண்பர்கள், குடும்ப வாழ்க்கை என பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. இதில் சிலவற்றுக்கு பூரி ஜெகன்நாத் பதில் கூறாமல் மவுனமாக இருந்துள்ளார். இவரைத் தொடர்ந்து இன்று நடிகை சார்மியை அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
27 mins ago
இந்தியா
32 mins ago
இந்தியா
36 mins ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago