மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்வேன்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருக்கம்

By என்.மகேஷ் குமார்

“என்னை நம்பி உள்ள மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்யவும் தயார்” என தனது சொந்த தொகுதியான குப்பத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உருக்கமாகப் பேசினார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 2 நாள் சுற்றுப்பயணமாக சித்தூர் மாவட்டம் குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இரண்டாம் நாளான வியாழக்கிழமை பல அரசு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். தனது தொகுதி மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அதன்பின்னர் அவர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:

பணிச்சுமை காரணமாக எனது சொந்த தொகுதிக்கு தொடர்ச்சியாக வர இயலாவிட்டாலும், என்னை இந்த குப்பம் தொகுதி மக்கள் தொடர்ந்து வெற்றிப் பெற செய்து வருகிறார்கள். இதற்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றிக் கடன் பட்டிருப்பேன். என்னை நம்பி உள்ள மக்களுக்காக உயிர்த் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறேன். ஆனால் சிலர் ஜாதி, மதம், கட்சி என வேறுபடுத்தி இந்த குப்பம் தொகுதியில் அரசியல் செய்கின்றனர். எனக்கு எந்த வேறுபாடும் இல்லை.

கடந்த 2 நாட்களில் மட்டும் குப்பம் தொகுதியில் ரூ. 230 கோடி செலவில் பல வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. பழங்கள், பட்டு, பால் உற்பத்தி குப்பத்தில் நன்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இவை இங்கிருந்து பல வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை அமைக்கப்பட வேண்டும். இதற்காக மானிய விலையில் கழிப்பறைகளை அரசு கட்டித் தருகிறது. இதனை பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கிராமத்துக்கும் சிமென்ட் சாலை, கால்வாய்கள், சாலை விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஏழைகளுக்கு மானிய விலை வீடுகள் கட்டித்தர அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால் நேரடியாக எனக்கு போன் செய்யுங்கள். முறைகேடு நடந்தால் 1100 என்கிற இலவச தொலைபேசி எண்ணில் புகார் தெரிவியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்