காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு: 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

By பீர்சதா ஆஷிக்

காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சண்டையில் பெண் ஒருவரும் உயிரிழந்தார்.

இதுகுறித்து பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் கூறும்போது, தெற்கு காஷ்மீரிலுள்ள அனந்த்நாக் பகுதியில் தீவிரவாதிகள் ஒரு வீட்டில் மறைந்திருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கும் தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

பொதுமக்களில் சிலரை மனிதக் கேடயமாக பயன்படுத்திக்கொண்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பெண் ஒருவர் காயமடைந்து உயிரிழந்தார். பொதுமக்களை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட்னர்" என்றார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பெண்ணின் பெயர் தகிரா பேகம் என்று முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்