ஹைதராபாத்தில் போதைப் பொருள் சிக்கிய விவகாரம் தொடர் பாக தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த மேலும் 11 பேருக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஹைதராபாத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் சிக்கிய விவகாரம் தெலுங்கு திரைப்பட உலகில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக கலால் துறை நடத்திய விசாரணையில், பிரபல தெலுங்கு திரைப்பட நடிகைகள், நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பலருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. அதன்பேரில் நடிகைகள் சார்மி, முமைத்கான், நடிகர்கள் ரவிதேஜா, தருண், நவ்தீப், தனீஷ், நந்து, சுப்பராஜு, இயக்குநர் பூரி ஜெகன்நாத், ஒளிப்பதிவாளர் ஷியாம் கே. நாயுடு, ஆர்ட் டைரக்டர் சின்னா மற்றும் நடிகர் ரவிதேஜாவின் கார் ஓட்டுநர் ஸ்ரீநிவாச ராவ் உட்பட 12 பேருக்கு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் தெலுங்கு திரைப்பட உலகை சேர்ந்த மேலும் 11 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதன் பேரில் நேற்று கூடுதலாக 11 பேருக்கு கலால் துறை விசாரணை குழுவினர் நோட்டீஸ் அனுப்பினர். இவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் வரும் 19-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கலால் துறை விசாரணை குழுவினர் முன்பு நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும்.
தங்களுக்கு நோட்டீஸ் அனுப் பப்பட்டிருப்பதை நடிகர்கள் நவ்தீப் மற்றும் சுப்பராஜுலு ஒப்புக் கொண்டுள்ளனர். இயக்குநர் பூரி ஜெகன்நாத், நடிகை சார்மி, முமைத்கான் உள்ளிட்ட சிலர் மறுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago