கங்கை நதியைத் தூய்மைப்படுத்த, அதன் கரையோரத்தில் குப்பைகள் கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் புனித நதிகளாகக் கருதப்படும் கங்கை, யமுனைக்கு ‘வாழும் மனிதர்கள்’ அந்தஸ்தை வழங்கி உத்தராகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஸ்வதந்தர் குமார் தலைமையிலான அமர்வு, கங்கை நதியை தூய் மைப்படுத்துவதற்கான பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளி யிட்டது.
அதன்படி, ஹரித்துவார் உன்னாவ் இடையே கங்கை நதிக் கரையோரம் குப்பைகள், கழிவுகளைக் கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க அரசு அதிகாரிகளுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட்டது. தீர்ப்பாயம் தனது உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது:
ஹரித்துவார் உன்னாவ் இடையே கங்கை நதியில் இருந்து 500 மீட்டருக்குள் குப்பைகள் கொட்ட அனுமதிக்க கூடாது. அத்துடன் ஹரித்துவார்- உன்னாவ் இடையே நதியில் இருந்து 100 மீட்டர் தூர பகுதி வளர்ச்சித் திட்டம் மேற்கொள்ளக்கூடாத பகுதியாக அறிவிக்கப்படவேண்டும் என்றும் பசுமை தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது.
கங்கை நதிக் கரையோரம் மதச் சடங்குகள் செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, உத்தரபிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்கள் வகுக்க வேண்டும்.
கங்கை நதிக் கரையோரம் (ஜைமவ் உன்னாவ் பகுதியில்) உள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைகளை, 6 வாரங்களுக்குள் வேறு இடங்களுக்கு மாற்ற கடமை உணர்வுடன் உத்தரபிரதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மொத்தம் 543 பக்கங்கள் கொண்ட தீர்ப்பு சரியாக அமல் படுத்தப்படுகிறதா என்பதை கண் காணிக்க, மேற்பார்வை குழு ஒன் றையும் தீர்ப்பாயம் அமைத்துள் ளது. இந்தக் குழு தொடர்ந்து ஆய்வு செய்து அவ்வப்போது தீர்ப் பாயத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago