பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது

By எம்.சண்முகம்

200 நகரங்களில் 40 ஆயிரம் பேர் பங்கேற்ற ஆய்வில் தெரியவரும் மக்கள் மனநிலை

இந்திரா காந்திக்கு அடுத்தபடியாக எதிர்க்கட்சிகளால் அதிகம் விமர்சிக்கப்படும் தலைவராக பிரதமர் மோடி இருந்து வருகிறார். குறிப்பாக அவரது வெளிநாட்டுப் பயணம் கடும் விமர்சனப் பொருளாக இருந்து வருகிறது. நாட்டின் பிரதமராக 2014-ம் ஆண்டு அவர் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளில் இதுவரை அவர் 66 நாடு களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது பயணத்துக்காக ரூ.350 கோடிக் கும் மேல் அரசுப் பணம் செலவாகி உள் ளது. பதவியேற்ற பின் 1140 நாட்களுக்கு மேல் பொறுப்பில் இருந்து வரும் மோடி, தன் பதவிக் காலத்தில் 140 நாட்கள் அதாவது 12 சதவீதத்தை வெளிநாடுகளில் கழித்துள்ளார். அமெரிக்காவுக்கு 4 முறை சென்று வந்துள்ளார். சீனா, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, சிங்கப்பூர் நாடுகளுக்கு 2 முறை சென்று வந்துள்ளார்.

நாட்டை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வேன் என்று வாக்குறுதி அளித்துவிட்டு பதவிக்கு வந்த ஒரு தலை வர் பதவிக்காலத்தில் கணிசமான நேரத்தை வெளிநாட்டு பயணத்தில் செல வழித்தால் நாட்டை எப்படி முன்னேற்ற முடியும் என்பது எதிர்க்கட்சிகளின் பிர தான கேள்வியாக உள்ளது. வெளி நாட்டுப் பயணமும் நாட்டின் முன்னேற் றத்துக்கான பணி தான் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும், அவரது வெளிநாட்டுப் பயணங்களால் இதுவரை என்ன பலன் நாட்டுக்கு கிடைத்துள்ளது என்ற கேள்வியை எதிர்க்கட்சியினரும் பொதுமக்களும் எழுப்புகின்றனர்.

இதற்கெல்லாம் பாஜக-வினர் மற்றும் மோடி ஆதரவாளர்கள் தரப்பில் இருந்து கிடைக்கும் பதில் ‘மேக் இன் இண்டியா திட்டம்’, ‘பிராண்ட் இந்தியா’ என்ற அம்சத்தை மனதில் வைத்தே பிரதமர் இத்தனை நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். வெளிநாட்டு நிறுவனங்கள் பல இந்தியாவில் முதலீடுகள் செய்தால் மட்டுமே இந்தியா வளரும் என்பது அவரது நம்பிக்கை. அதற்கு இந்தியா மீது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அதற்கான பணிதான் மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் என்பது அவரது ஆதரவாளர்களின் கருத்து. கடந்த மூன்று ஆண்டுகளில் அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்பான 87 விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன என்கிறது மத்திய அரசு.

கடந்த 2014-15-ல் 36.5 பில்லியன் டாலராக இருந்த அந்நிய நேரடி முதலீடு, அடுத்தடுத்த ஆண்டுகளில் 55.66 மற்றும் 60.8 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது வளர்ச்சியே என்கின்றனர். மேலும், பூடானில் 4 நீர்மின் திட்டத்திற்கு வித்திட்டது, நேபாளத்தில் மிகப்பெரிய அணை கட்ட ஒப்பந்தம் பெற்றது, டெல்லி - மும்பை ரயில் திட்டத்திற்கு ஜப்பான் நிதியுதவி பெற்றது ஆகியவை வளர்ச்சிக்கானவை என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். அதுமட்டுமின்றி, உள்நாட்டு நிறுவனங்களிடம் 3.4 பில்லியன் டாலர் அளவுக்கு ராணுவ தளவாடங்களைப் பெற பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதுநாள் வரை வெளிநாடுகளுக்குச் சென்ற இந்தப் பணம் இனி உள்நாட்டிலேயே இருக்கும் என்பதால் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இந்த முயற்சியின் பலனாக ரிலையன்ஸ், மஹிந்த்ரா, டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி அமைப்புகளை இப்போது துவக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இவையெல்லாம் அரசின் சாதனை களாக பட்டியலிடப்பட்டாலும், மக்களின் எதிர்பார்ப்பை மோடி இதுவரை பூர்த்தி செய்யவில்லை என்பதே ஆய்வு முடிவு களின் நிலை. சிட்டிசன் என்கேஜ்மென்ட் என்ற அமைப்பு எடுத்த ஆய்வில், ‘மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அதன் பலனைப் பார்க்கும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்தவண்ணம் உள்ளது. இருந்தாலும் அவர் இன்னும்மக்களின் ஆதரவு பெற்ற பிரதமராகவே இருக்கிறார்’ என்று தெரியவந்துள்ளது. இந்த அமைப்பின் லோக்கல்சர்க்கிள் நடத்திய ஆய்வில் 200-க்கும் அதிகமான நகரங்களைச் சேர்ந்த 40 ஆயிரம் பேர் பங்கேற்று 2 லட்சத் துக்கும் அதிகமான கருத்துகளைப் பதிவு செய்தனர். இந்த புள்ளிவிவரங்கள் மூலம் மோடி அரசு மக்களின் ஆதரவைப் பெற்ற அரசாகவே இன்னும் இருந்து வருவது நிரூபணமாகி உள்ளது.

பணமதிப்பு நீக்கம் மூலம் கணிசமான அளவு கறுப்பு பணம் ஒழிப்பு, ஆதார் மூலம் சலுகைகள் தவறானவர்களுக்கு சென்றடையாமல் மிச்சப்படுத்தியது ஆகியவை சாதனைகளாக கூறப்பட் டாலும், மக்களைத் திருப்திப்படுத்தும் அளவுக்கு கண்கூடாக தெரியும் எந்த சாதனையையும் மோடி செய்யவில்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. மோடி அரசு எடுத்துவரும் முயற்சிகளின் பலன் அவரது பதவிக்காலம் முடியும் தருவாயில் கண்கூடாக தெரியும் என் கின்றனர் அவரது ஆதரவாளர்கள். பொரு ளாதார நிபுணர்களின் கருத்தும் அது வாகவே உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்