குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டி போராட்டம் நடத்தி, சிறைக்கு சென்ற ஹர்திக் படேல் 9 மாதங்களுக்கு பின்பு இன்று ஜாமீனில் வெளிவந்தார்.
23 வயதான ஹர்திக் படேல் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் படேல் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு 2015 ஜூலை மாதம் போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால் இந்தப் போராட்டம் வன்முறையில் முடிந்தது.
இதனையடுத்து, அக்டோபர் 2015-ல் ஹர்திக் படேல் கைது செய்யப்பட்டார். இவர் மீது 2 தேசத் துரோக வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதனையடுத்து ஹர்திக் படேலுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் ஜாமீன் அளித்தது.
9 மாதங்களுக்கு பின் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ஹர்திக் பட்டேலை படிதார் சமூகத்தினர் மற்றும் ஹர்திக் பட்டேல் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.
ஜாமீனில் வெளி வந்த ஹர்திக் இன்று சூரத், அஹமதபாத் மற்றும் பிற இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அதன்பின் ஹர்திக் படேல் நீதிமன்ற ஆணையின் படி குஜாராத்திலிருந்து வெளியேறுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago