உச்சி மாநாடுகளில் பங்கேற்க 10 நாள் பயணத்தைத் தொடங்கினார் மோடி

By பிடிஐ

ஜி20 உள்ளிட்ட உச்சி மாநாடுகளில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி தெற்கு ஆசிய நாடுகளுக்கான தனது 10 நாள் சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கினார்.

தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்களை சந்திப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 3 ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப் பயணத்தை இன்று துவங்கினார்.

பயணத்தின் முதல் நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் டெல்லியிலிருந்து மியான்மருக்கு புறப்பட்டார்.

அங்கு அவர் தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார். இதனை தொடர்ந்து நவம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் அவர் 7 கிழக்கு ஆசிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் பேங்கேற்பார்.

அங்கிருந்து பிஜி நாடு செல்லும் அவர், நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேசினில் நடக்க இருக்கும் ஜி-20 உச்ச மாநாட்டில் பங்கேற்கிறார்.

இந்த பயணங்களில் பிரதமர் நரேந்திர மோடி சீனா, ஜெர்மனி, பிரிட்டன், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தலைவர்களை சந்தித்து 20 இருநாட்டு ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்