காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பொறுப்புகள் அனைத்தையும் ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என்று அக்கட்சியின் பொது செயலாளர் திக்விஜய் சிங் கூறினார்.
இது குறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, "காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் இருக்கும் மனநிலை தான் இது. காங்கிரஸ் கட்சி எப்போதும் இளைஞர்களால் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்று தான் நினைக்கும்.
அதன்படி, தற்போது ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டிய தக்க தருணம் வந்துவிட்டது. தலைமை பொறுப்பில் இருக்கும் சோனியா காந்தி அவரை வழி நடத்தி செல்ல வேண்டும்.
மேலும், ராகுல் காந்தி பதவி மற்றும் பொறுப்புகளுக்காக என்றுமே கவலைப்பட்டது இல்லை. மோடி போல பதவி இல்லை என்றால் மூச்சு கூட விட முடியாத அளவில் ராகுல் காந்தி இருக்கவில்லை" என்று அவர் கூறினார்.
திக்விஜய் சிங் முந்தைய காலத்தில் ராகுல் காந்திக்கு எதிரான கருத்துக்களை கூறிவந்த நிலையில், தற்போது அவர் தெரிவித்திருக்கும் கருத்து காங்கிரஸ் கட்சிக்குள் சிறிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே திக்விஜய் சிங் தனது தனிப்பட்ட கருத்தை மட்டுமே கூறி இருப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலங்களவை தலைவரான ஆனந்த் ஷர்மா கூறும்போது,
"காங்கிரஸ் கட்சி என்றுமே நாட்டின் நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் பாடுபட்டு வருகிறது. இதில் கட்சி பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் ஒன்றுபட்டுள்ளனர்.
சோனியா காந்தி கட்சியின் ஊக்கத்துக்கு ஆதாரமாக விளங்குகிறார். அதே போல ராகுல் காந்தி தான் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால நம்பிக்கை" என்று குறிப்பிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago