2ஜி: ஆ.ராசா, கனிமொழியிடம் ஏப்.4-ல் வாக்குமூலம் பதிவு

By செய்திப்பிரிவு

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா எம்.பி., கனிமொழி உள்ளிட்டோரின் வாக்கு மூலங்களை பதிவு செய்யும் பணியை வரும் ஏப்ரல் 4-ம் தேதி மேற்கொள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

2ஜி வழக்கில் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா, கனிமொழி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தங்களின் வாக்குமூலங்களை நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் திங்கள்கிழமை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணையை திங்கள்கிழமை நடத்திய நீதிபதி ஓ.பி.சைனி, வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணி வரும் ஏப்ரல் 4-ம் தேதி நடைபெறும் என தெரிவித்தார்.

குற்றம் சாட்டப்பட் டோரிடமிருந்து வாக்குமூலங் களைப் பெறுவதற்கான கேள்வி களை தயாரிப்பது அதிக காலம் எடுத்துக் கொள்ளும் பணியாகும். இது தொடர்பான பணிகள் பாதியளவே நிறைவடைந் துள்ளதால், வாக்குமூலங்களை பெறும் நடவடிக்கை ஒத்தி வைக்கப்படுகிறது என நீதிபதி அறிவித்தார்.

2ஜி முறைகேடு தொடர்பாக எஸ்ஸார் குழுமம், லூப் டெலிகாம் நிறுவனங்களுக்கு எதிராக தொடரப் பட்டுள்ள மற்றொரு வழக்கின் விசாரணை ஏப்ரல் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த இரு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட் டவர்களிடம் வாக்கு மூலங்களைப் பெறுவதற் கான கேள்விகள் அச்சடிக்கப்பட்ட காகிதம் வரும் ஏப்ரல் 4-ம் தேதி அளிக்கப்படும். ஒரு வார காலத்திற்குள் சம்பந்தப்பட்டவர்கள் தங்களின் பதில்களைத் தர வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்