ரயில் கட்டண உயர்வு, புதிய ரயில்கள் அறிவிப்பு இல்லை: ரயில்வே பட்ஜெட் 2016-17 முக்கிய அம்சங்கள்

By பாரதி ஆனந்த்

பயணிகள் கட்டணம், சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பாபு தாக்கல் செய்தார். அதேபோல், புதிய ரயில்கள் குறித்த அறிவிப்பும் இதில் இடம்பெறவில்லை.

பிரதமர் மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின், 2-வது ஆண்டாக ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று (வியாழக்கிழமை) பகல் 12 மணிக்கு மக்களவையில் தாக்கல் செய்தார்.

ரயில்வே பட்ஜெட் உரையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:



* பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் உயர்வு இல்லை; புதிய ரயில்கள் அறிவிப்பும் இல்லை.

* ரயில்வே துறையில் ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க ரூ. 50 கோடி ஒதுக்கப்படும்.

* பத்திரிகையாளர்கள் இணையதளம் மூலம் ரயில் பயணச்சீட்டு முன்பதிவின்போது சலுகைகள் பெறலாம்.

* ரயில்வே திட்டங்கள் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய 7 இயக்குனர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

* முழுமையான ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

* ரயில் பந்து பத்திரிகை மாநில மொழிகளிலும் அச்சடிக்கப்படும்.

* அடுத்து வரும் ரயில் நிலையம் குறித்த விவரம் பயணிகளுக்குஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் போர்டு மூலம் தெரிவிக்கும் சேவை விரைவில் தொடங்கப்படும்.

* டிக்கெட் முன்பதிவின்போது காப்பீட்டுக்கான வாய்ப்பு வழங்கப்படும்.

* சரக்குகளை இருப்புவைக்க ரயில்வே சார்பில் இரண்டு பிரத்யேக கிடங்குகள் உருவாக்கப்படும்.

* தேர்வு செய்யப்பட்ட சில ரயில் நிலையங்களில் சோதனை அடிப்படையில் பார் கோடு வசதி கொண்ட ரயில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

* ஆஜ்மீர், அமிர்தசரஸ், கயா, மதுரா, நான்டெட், புரி, திருப்பதி, வாரணாசி, நாகப்பட்டினம் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்படும்.



இந்தியாவிலேயே முதன் முறையாக, சென்னையில் ரயில் ஆட்டோ ஹப் அமைக்கப்படும். சென்னையில் தயாரிக்கப்படும் கார் உள்ளிட்ட வாகனங்களை இந்த மையம் மூலம் ரயில்களில் கொண்டு செல்ல வசதி செய்யப்படும்.

சில சலுகைகள்:

* வெளிநாட்டு கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் இ-டிக்கெட் சேவையைப் பெறலாம்.

* இ கேட்டரிங் சேவை 408 ரெயில்நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்

* பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளூர் உணவுகள் வழங்கப்படும்.

* குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ரயில்வே கேட்டரிங்கில் வழங்கப்படும். அதேபோல், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் வழங்கப்படும்.

* ரயில் நிலையங்களில் பால், மருந்துப் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகள் அமைக்கப்படும்.

* மூத்த குடிமக்கள் வசதிக்காக கொங்கன் ரயில்வேயில் சாரதி சேவா என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. விரைவில் இது அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் நீட்டிக்கப்படும்.

* முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்ய 139 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்.

* வர்த்தக மையங்களை இணைக்கும் பாதைகளில் இரவு நேரத்தில் மட்டும் டபுள் டக்கர் ரயில்கள் இயக்கப்படும்.

டிக்கெட் முன்பதிவு செய்யாதவர்கள் வசதிக்காக:

1. பயணிகள் நெரிசல் அதிகமிருக்கும் மார்க்கங்களில் முற்றிலும் முன்பதிவு அற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.

2. டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகள் வசதிக்காக நீண்ட தூரம் செல்லும் அந்தோதயா ரயில்கள் இயக்கப்படும்.

* மணிப்பூர், மிசோரம் மாநிலங்களில் அகல ரயில் பாதை அமைக்கப்படும்.

* இந்த ஆண்டு 100 ரயில் நிலையங்களிலும்; அடுத்த ஆண்டில் 400 ரயில் நிலையங்களிலும் வைபை சேவை வழங்கப்படும்.

* 2016-17-ல் 2000 கி.மீ. ரயில் பாதை மின்மயமாக்கப்படும்.

* பரிசோதனை அடிப்படையில் சில ரயில்களில் தானியங்கி கதவு பொருத்தப்படும்.

* மாநிலங்களுடன் இணைந்து ரயில்வே செயல்திட்டங்களை நிறைவேற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 17 மாநிலங்கள் இத்தகைய ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளன.

* தமிழ்நாடு, குஜராத், தெலுங்கானா, கர்நாடகா மாநிலங்களில் புறநகர் வழித்தடங்கள் அந்தந்த மாநில அரசுகளுடன் இணைந்து மேம்படுத்தப்படும்.

* அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.



* ரயில்களில் பெண் பயணிகள், மூத்த குடிமக்களுக்கான இருக்கை ஒதுக்கீடு அதிகரிப்பு. மூத்த குடிமக்களுக்கு 50% இருக்கை ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ரயிலிலும் 120 கீழ் படுக்கைகள் முதியோருக்கென ஒதுக்கப்படும்.

டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு பின்பற்றப்படும்.

* இ-டிக்கெட்டிங் சேவை மூலம் நிமிடத்துக்கு 7200 பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.

* ரூ.40,000 கோடி செலவில் இரண்டு புதிய ரயில் பெட்டி தயாரிப்பு மையங்களை உருவாக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

* ரயில்வே துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய எல்.ஐ.சி. முன்வந்துள்ளது.

* துறைமுகங்களை ரயில் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

* ரயில்வே வாரியத்தில் பணியிடங்கள் நிரப்புவதில் வெளிப்படத்தன்மையை உறுதி செய்ய ஆன்லைன் மூலம் காலிப் பணிகளை நிரப்புவதை பின்பற்றுகிறோம்.

* ரயில் பயணிகளின் பொழுது போக்குக்காக பெட்டிகளில் பண்பலை வானொலி வசதி ஏற்படுத்தப்படும்.

* நாட்டின் பிற பகுதிகளுடன் வட கிழக்கு மாநிலங்களை இணைப்பதற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

* டெல்லி - சென்னை இடையே புதிய சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும். இதே போல் காரக்பூர் - மும்பை - விஜயவாடா இடையேயும் புதிய சரக்கு ரயில் பாதை அமைக்கப்படும்.

* அடுத்த ஆண்டில் புதிதாக 2,800 கி.மீ தூரம் கொண்ட புதிய ரயில்வே இருப்புப் பாதைகள் திறக்கப்படும்.

* 2016 -17-ல் ரயில்வே துறையில் ரூ.1.21 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.

* ரயில் நிலைய ஓய்வறைகளை ஆன்லைனிலேயே புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.

* 2016- 17 நிதியாண்டில் ரூ.1,84,820 கோடி வருவாய் ஈட்ட ரயில்வே திட்டம். இது கடந்த ஆண்டைவிட 10.1% அதிகமாகும்.

* 4,450 ஆளில்லா ரயில்வே வழித்தடங்கள் நீக்கப்பட்டுள்ளது.

* ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

* குறைவான ரயில் கட்டணத்தால் ரூ.30,000 இழப்பு ஏற்பட்டுள்ளது.

* ரயில்வே துறையின் வெற்றிப்பயணத்துக்கு அதன் ஊழியர்கள் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.

* இந்த பட்ஜெட்டில் ரயில்வே துறையில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

* ரயில்வே பட்ஜெட் பிரதமர் மோடியின் கனவை நனவாக்குவதாக இருக்கும். ரயில்வே துறையை நாட்டின் பொருளாதாரம் மற்றும் வளர்ச்சியின் முதுகெலும்பாக்குவேன் என பிரதமர் கூறியிருந்தார். அதற்கேற்ப பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

'எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும்'

பட்ஜெட் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்துக்கு வந்த ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, "இந்த பட்ஜெட் மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதாக அமையும் என நம்புகிறேன். நாட்டு மக்களின் தேவைகள், எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு ரயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

மேலும்