ஆந்திராவில் ரத்னாச்சல் விரைவு ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பாக ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் பொதுச் செயலாளரிடம் சிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
ஆந்திராவில் பிறப்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்க்கக் கோரி கடந்த ஜனவரி 31-ம் தேதி காப்பு சமுதாயத்தினர் போராட்டத் தில் ஈடுபட்டனர். அப்போது கிழக்கு கோதாவரி மாவட்டம் துனி பகுதியில், விஜயவாடாவில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த ரத்னாச்சல் விரைவு ரயிலுக்கு விஷமிகள் சிலர் தீ வைத்தனர். இதில் அந்த ரயில் முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 300 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இதைத் தொடர்ந்து வழக்கு சிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான பி.கருணாகர் ரெட்டியிடம் நேற்று குண்டூரில் சிஐடி போலீஸார் பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அப்போது இந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்திருப்பதாக சிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள், ஆளும் தெலுங்கு தேச அரசு பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago