தொகுதி ஒதுக்கீட்டில் பாஜக மூத்த தலைவரான ஜஸ்வந்த் சிங் அதிருப்தி தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் தொகுதி எம்பியாக உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் (75) ராஜஸ்தானின் பாமர் தொகுதியில் போட்டியிட விரும்புகிறார். பாமரின் ஜசோல் கிராமத்தில் பிறந்தவரான ஜஸ்வந்த் சிங்கின் குடும்பத்தினர் அங்கு வசிக்கின்றனர்.
ஆனால் அவரை கட்சி மீண்டும் டார்ஜிலிங்கிலேயே போட்டியிட வைக்க எண்ணுகிறது. காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்த ஜாட் சமூகத்தை சேர்ந்த சோனாராமை பார்மரில் போட்டியிட வைக்க வேண்டும் என ராஜஸ்தான் முதல்வல் வசுந்தரா ராஜே விரும்புகிறார். இவர், கடந்த டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாமர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சில ஆயிரம் வாக்குகளில் தோற்றவர்.
இது குறித்து பாஜகவின் டெல்லி வட்டாரம் தி இந்துவிடம் கூறுகையில், ‘அநேகமாக தனது கடைசி தேர்தல் இது என்பதால் ஜஸ்வந்த் சிங் சொந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஜஸ்வந்த் சிங்கிற்கும் வசுந்தரா ராஜேவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது, இதன்காரணமாக அவருக்கு பாமர் தொகுதியை ஒதுக்க வசுந்தரா ராஜே தடையாக உள்ளார்’ என தெரிவித்தன.
ராஜஸ்தானில் மொத்தம் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் 21-ல் பாஜக வேட்பாளர்களை அறிவித்துள்ளது. பாமர் உட்பட இன்னும் நான்கு தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் உள்ளது. தனக்கு பாமர் தொகுதி ஒதுக்கவில்லை எனில், அங்கு சுயேச்சையாக போட்டியிட ஜஸ்வந்த் சிங் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago